Related Posts with Thumbnails

Cute Stills: Actress stills, Hot photos, New movie gallery, Sexy photos

↑ Grab this Headline Animator

Related Posts with Thumbnails

Cute Stills: Actress stills, Hot photos, New movie gallery, Sexy photos

↑ Grab this Headline Animator

Friday, September 28, 2012

தாண்டவம் விவகாரம் - திருட்டுத் தாண்டவம்


1. பொன்னுசாமி - யுடிவி - தாண்டவம்  விவகாரம்:

தாண்டவம் படத்தின் கதை விவகாரம் இயக்குநர் சங்கத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து இயக்குநர் அமீர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் உதவி இயக்குநர் பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டி, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் ஒரு இணைச் செயலர் பதவி விலகியுள்ளன்.

இதனால் இயக்குநர் சங்கமே இரண்டாக பிளவுபட்டு நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

தாண்டவம் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போகும் முன் இயக்குநர் சங்கத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் படத்தைத் தயாரித்த யுடிவி மற்றும் பிரச்சினையை விசாரித்த இயக்குநர் சங்க குழுவுக்கிடையில் எந்த உடன்பாடும் எட்ட முடியவில்லை.

கடைசி நேரத்தில்தான் பொன்னுசாமி நீதிமன்றம் போனார். அவருக்கு ஆதரவான நிலையை சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக உள்ள உதவி இயக்குநர்கள் எடுத்தனர். சங்கத்தின் சார்பில் இவர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை பொன்னுசாமிக்கு ஆதரவாக அளித்தனர்.

இந்தக் கடிதம் தன் அனுமதியில்லாமல் தரப்பட்டிருப்பதாகக் கூறி சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் இயக்குநர் அமீர்.



2.நன்றி வினவு:

எந்த நாளிதழ் அல்லது பத்திரிகைகளிலும் இது குறித்த செய்தி, ஒரு துணுக்காகக் கூட இதுவரை வரவில்லை. அப்படி செய்தி வரக் கூடாது என்பதற்காகவே தாண்டவம் பட விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாரி வழங்கப்பட்டுள்ளன

பொன்னுச்சாமி, ஓர் உதவி இயக்குநர். முதலாளிகள் ஆதிக்கம் செய்யும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நம்பி சென்னைக்கு வந்த லட்சக்கணக்கான அப்பாவிகளில் இவரும் ஒருவர். ‘மொழி’, ‘பயணம்’ உட்பட பலப் படங்களை இயக்கிய ராதாமோகனின் உதவியாளர். தனியாக  படம் இயக்க முடிவு செய்ததும் அலைந்து திரிந்து இறுதியில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தமிழக அதிகாரியான தனஞ்செயனை சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார்.

இவர் சொன்ன கதையை கேட்டதுமே தனஞ்செயனுக்கு அலாரம் அடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என அனுபவ மூளை உணர்த்தியிருக்கிறது. உடனே முழு திரைக்கதையையும் எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். பொன்னுச்சாமியும் நம்பிக்கையுடன், தான் எழுதிய திரைக்கதையை கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்து, அதை பைண்ட் செய்து கொடுத்திருக்கிறார். உரிய நேரத்தில் அழைக்கிறோம் என்று சொல்லி அவரை தனஞ்செயன் வழியனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால், நாட்கள் மாதங்களாகி ஆண்டுகள் ஆன பிறகும் யுடிவி-யில் இருந்து பொன்னுச்சாமிக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. இடையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தை யுடிவி தயாரிப்பதாக செய்தி வந்தது. ஒருவேளை இந்தப் படம் முடிந்ததும், தன்னை அழைக்கலாம் என பொன்னுச்சாமி காத்திருந்தார்.

அப்போதுதான் அந்த இடி இறங்கி பொன்னுச்சாமியின் வாழ்க்கையை பொசுக்கியது. ‘தாண்டவம்’ படம் குறித்த செய்திகளை வாசித்தவருக்கு அதிர்ச்சி. எந்தக் கதையை தனஞ்செயனிடம் சொன்னாரோ, அந்தக் கதை அப்படியே இயக்குநர் விஜய்யின் பெயரில் உருவாகிக் கொண்டிருந்தது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியான கதாநாயகன், தன் செவிகளையே கண்களாக பாவித்து எதிரிகளை பழி வாங்குவதுதான் கதை. இந்த ஒன் லைன் யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், திரைக்கதை? அது அப்படியே பொன்னுச்சாமி கொடுத்த பவுண்டட் ஸ்கிரிப்ட்.

பொதுவாக கதை திருட்டு என்பது தமிழ்ப் படவுலகில் சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. சொல்லப்போனால் இதற்காக யாரும் கூச்சப்படுவதில்லை. வெளிநாட்டு படங்களை சுட்டும், தங்களிடம் உதவி இயக்குநராக இருப்பவர்களின் படைப்பை களவாடியுமே பெரும்பாலான இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர்களுக்கும் தெரியும். ஆனாலும் எதிர்காலத்தில் கிடைக்கும் என நம்பும் பொற்கால வாழ்க்கைக்காக நிகழ்காலத்தில் தங்கள் கற்பனை திருடப்படுவதை பொறுத்துக் கொள்கிறார்கள்.

‘தாண்டவம்’ படத்தின் இயக்குநரான விஜய், இப்படி கதை திருடுவதில் மற்ற இயக்குநர்களைப் போல மன்னர். ‘க்ரீடம்’, ‘பொய் சொல்லப் போறோம்’ ஆகிய அவரது படங்கள் பிறமொழிகளின் தழுவல் என்றால், ‘மதராசப்பட்டினம்’, அப்படியே ‘டைட்டானிக்’ ஹாலிவுட் படத்தின் காப்பி. இதனுடன் ‘லகான்’ இந்திப் படத்தை தயிர்வடையில் பூந்தி தூவுவது போல் தூவியிருந்தார். ஆனால், சென்ற ஆண்டு வெளியான அவரது ‘தெய்வத் திருமகள்’ காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் அப்படியே ‘ஐ’ம் சாம்’ ஹாலிவுட் படத்தின் நகல். இதில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. இந்த ‘தெய்வத் திருமகள்’ படத்தை தமிழகத்தில் வெளியிட்டதன் வழியாகத்தான் யுடிவி மோஷன் பிக்சர்ஸ், முதல்முறையாக தென்னகத்தில் காலடி எடுத்து வைத்தது.

ஆகவே தனஞ்செயனும் சரி, இயக்குநர் விஜய்யும் சரி ஆரம்பம் முதலே அக்யூஸ்டுகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் தன் கதையை திருடியிருக்கிறார்கள் என பொன்னுச்சாமியும் அடித்துச் சொல்கிறார். இதை பொன்னுச்சாமியின் திரைக்கதையை படித்தவர்களும் ஆமோதிக்கிறார்கள். ‘தாண்டவம்’ டிரெய்லரில் இருக்கும் பல காட்சிகள் அப்படியே  பொன்னுச்சாமியின் திரைக்கதையில் இருப்பதாக சத்தியம் செய்கிறார்கள்.

ஆனாலும் ‘தாண்டவம்’ கதை, இயக்குநர் விஜய்யின் சொந்த சரக்கே என நிரூபிக்க குட்டிக்கரணம் அடிக்கிறார், தனஞ்செயன். இதற்காகவே பல லட்சம் ரூபாயை செலவு செய்து அமெரிக்காவில் இருந்து  டேனியல் கிஷ் என்னும் பார்வையற்ற நபரை அழைத்து வந்து, ‘இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுதான் ‘தாண்டவம்’ படத்தை எடுத்திருக்கிறோம்…’ என காதில் பூ சுற்றுகிறார்.

இதையெல்லாம் பார்த்து கொந்தளித்துப் போன பொன்னுச்சாமி, தனஞ்செயனை சந்தித்து நியாயம் கேட்க முயன்றிருக்கிறார். ஆனால், இவரை சந்திக்கவே தனஞ்செயன் மறுத்துவிட்டார். உடனே, தான் அங்கம் வகிக்கும் இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சொம்பும், ஜமுக்காளமுமாக யுடிவி சென்ற பஞ்சாயத்து தலைவர்கள், கடைசி வரை பேச்சு வார்த்தையை இழுத்தடித்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ‘தாண்டவம்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வாங்கி விட்ட தனஞ்செயன், வரும் வெள்ளிக்கிழமை (28.09.12) படம் வெளியாவதாக விளம்பரமும் செய்து வருகிறார்.

படம் வெளியாகி விட்டால், தனக்கு நியாயம் கிடைக்காது… யுடிவியுடன் சமரசமாகி, அடுத்தப் படத்துக்கான வாய்ப்பை பெற்று இயக்குநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தனக்கு துரோகம் செய்து விட்டார்கள். இனியும் அவர்களை நம்பி பயனில்லை… என்பதை புரிந்து கொண்டு சக உதவி இயக்குநர்களின் உதவியோடு நீதிமன்றத்தின் கதவை பொன்னுச்சாமி தட்டியிருக்கிறார்.

இன்று இந்த வழக்கில் வந்த இடைக்கால உத்தரவின்படி தாண்டவம் படத்தை வெளியிடுவதற்கு யூடிவிக்கு தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் வழக்கு தொடர்ந்து நடக்கிறது. இறுதித் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு புறமிருக்க எந்த நாளிதழ் அல்லது பத்திரிகைகளிலும் இது குறித்த செய்தி, ஒரு துணுக்காகக் கூட இதுவரை வரவில்லை. அப்படி செய்தி வரக் கூடாது என்பதற்காகவே ‘தாண்டவம்’ பட விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாரி வழங்கப்பட்டுள்ளன. தவிர இன்றைய தினம் பல படங்களை யுடிவி தயாரித்து வருகிறது. அந்தப் படங்களின் புகைப்படங்களும், செய்திகளும், விளம்பரங்களும் ஒவ்வொரு வார – மாத – நாளிதழுக்கும் தேவை. எனவே இந்த கதைத் திருட்டை குறித்து அச்சு ஊடகங்கள் கவலைப்படவில்லை. சன் டிவியில் வெளியாகும் பெரும்பாலான நெடுந்தொடர்களுக்கு யுடிவிதான் விளம்பரங்களை வாங்கித் தருகிறது. பிற தனியார் தொலைக்காட்சிகளுக்கு படியளப்பதும் யுடிவிதான். எனவே காட்சி ஊடகங்களும் மவுனம் சாதிக்கின்றன.

பொன்னுச்சாமி கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். டைட்டில் கார்டில் தன் பெயர் வர வேண்டும். தன் படைப்புக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைக்காகத்தான் போராடி வருகிறார்.

ஆனால், டைட்டில் கார்டில் பெயர் போட முடியாது. அது பணிந்தது போலவும், திருட்டை ஒப்புக் கொண்டது போலவும் ஆகும். வேண்டுமானால், கொஞ்சம் பணத்தை வீசுகிறோம். எடுத்துக் கொண்டு போ… என யுடிவி பேரம் பேசுகிறது.

இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வையுங்கள் என பொழுதெல்லாம் விளம்பரத்தில் கூவும் வேலை இருப்பதால், இப்படியொரு சம்பவம் நடப்பதே தனக்கு தெரியாது என்பது போல் விக்ரம், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

இயக்குநர் சங்க பொறுப்பில் இருக்கும் பலர், வெறும் இயக்குநர்கள் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் கூட. எனவே யுடிவியில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றுதான் நாக்கைத் தொங்க போட்டபடி அலைகிறார்களே தவிர, பொன்னுச்சாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடத் தயாராக இல்லை.

திருட்டு டிவிடிக்காக கைகோர்த்து குரல் எழுப்ப தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக இருக்கிறார்கள். காரணம், இது மூலதனம் தொடர்பானது. லாபம் பறிபோகும் விஷயம். ஆனால், கதை திருட்டு அப்படியல்ல. அது, வெறும் உதவி இயக்குநர்களின் மூளை உழைப்பு. அவர்கள் சிந்தும் ரத்தம். ஆனாலும் இந்த ரத்தம் தமிழக மக்களின் நலனுக்காக அவர்களது வாழ்க்கையை பண்படுத்துவதற்கு பயன்படுவதில்லை. முதலாளிகள் உருவாக்கியிருக்கும் ஃபார்முலாக்களில் வெரைட்டி காண்பிப்பதையே இத்தகைய உதவி இயக்குநர்கள் வாழ்க்கை இலட்சியமாக கருதுகிறார்கள்.

அதுவே இறுதியில் கதைத்திருட்டுக்கு அடிப்படையாக இருக்கிறது. சினிமாவில் ஒரு ஆளாகி மக்களுக்கு மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற கனவின் பின்னால் இருப்பது பணம், புகழ், பிரபலம் மூன்றின் மீதான கவர்ச்சிதான். அதனால்தான் சினிமாத்துறை முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் துறையாக இருக்கிறது. இதை உடைக்க வேண்டுமானால் சினிமாவில் ஒரு ஆளாகி செய்வதன் மூலம் முடியாது. சினிமா உலகுக்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்களில் தனது கலை பயன்படட்டும் என்று ஒரு மக்கள் கலைஞனைப் போல சிந்திக்க வேண்டும்.

பொன்னுச்சாமியைப் போன்ற உதவி இயக்குநர்கள் அப்படி சிந்திப்பார்களா? அப்படி சிந்திக்காதவரை இந்த கதை திருட்டுக்களுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களை தண்டிப்பது சாத்தியமில்லை.



3.தாண்டவம் விவகாரம்- இயக்குநர் சங்கத்தின் முன் உதவி இயக்குநர்கள் போராட்டம்:

தாண்டவம் படத்தின் கதை உரிமை தொடர்பான சர்ச்சையில் இயக்குநர் சங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஏராளமான துணை இயக்குநர்கள் இன்று சங்கத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தாண்டவம் பட விவகாரம் இயக்குநர் சங்கத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது.

இந்தப் படத்தின் கதை தனக்கு சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குநர் பொன்னுசாமி. ஆனால் படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் பொன்னுசாமிக்கு ஆதரவாக உதவி இயக்குநர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேலும் பொன்னுசாமிக்கு நீதி கிடைக்கச் செய்வதை விட்டுவிட்டு, தாண்டவம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு சாதகமாக சங்கத்தின் முதல் நிலை நிர்வாகிகள் அமீர், கரு பழனியப்பன் போன்றவர்கள் செயல்படுவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொன்னுசாமிக்கு ஆதரவாக ஜெகதீசன், ஐந்துகோவிலான், பாலமுரளிவர்மன், வி.சி.விஜயசங்கர், விருமாண்டி என்கிற கமலக்கண்ணன், நாகேந்திரன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். சங்க இணைச் செயலரான தம்பிதுரையும் ராஜினாமா செய்தார். இவர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் பதவி விலகிவிட்டார்.

தங்கள் ராஜினாமா குறித்து பாலமுரளி வர்மன் கூறுகையில், "இந்த இயக்குநர் சங்கம் உருவானதே உதவி இயக்குநர்களுக்காகத்தான். ஆனால் இன்று பொன்னுசாமி என்ற உதவி இயக்குநரே இந்த சங்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே சங்கத்தில் புகார் பதிவு செய்தார் பொன்னுசாமி. அப்போதே, பொன்னுசாமியின் திரைக்கதையையும் விஜய்யின் திரைக்கதையையும் சங்த்தின் 7 பேர் கொண்ட குழு ஒப்பிட்டுப் பார்த்தது. உண்மையில் நாங்கள் கேட்ட பிறகே, விஜய் அந்த திரைக்கதையை தயார் செய்திருந்தார். இரு திரைக்கதைகளும் ஒரே மாதிரிதான் இருந்தன. பின்னர் படத்தையும் பார்த்தோம். படத்திலும் பொன்னுசாமியின் திரைக்கதையைத்தான் அப்பட்டமாக எடுத்தாண்டிருந்தனர்.

இந்தப் படத்தின் கதை அல்லது திரைக்கதைக்கு பொன்னுசாமி பெயரைப் போட வேண்டும் என்பதுதான் வைக்கப்பட்ட கோரிக்கை.

ஆனால் அதை யுடிவி ஒப்புக் கொள்ளவில்லை. மற்ற மொழிகளில் பிரச்சினை வரும் என்றார்கள். இதைத் தவிர்த்து வேறு எந்த திட்டத்துக்கும் பொன்னுசாமி சம்மதிக்காததால்தான் விஷயம் கோர்ட்டுக்குப் போனது. ஆனால் இந்த விசாரணையை வேண்டுமென்றே இயக்குநர் சங்கம் காலம் தாழ்த்தியது. குறிப்பாக ஜனநாதன், கரு பழனியப்பன், அமீர் போன்றவர்கள். அப்போதுதான் படத்துக்கு பொன்னுசாமியால் தடை வாங்க முடியாது என்று தெரிந்து காலம் தாழ்த்தினர்.

அவர்களின் இந்த ஒரு சார்பான நிலையைக் கண்டித்துதான் நாங்கள் ராஜினாமா செய்தோம். இன்று போராட்டம் நடத்தினோம். இந்த வழக்கையும் விடப் போவதில்லை.

இன்று அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏதோ நாங்கள் லெட்டர் பேடை திருடி பொன்னுசாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்ததாக பொய் கூறி வருகிறார். நாங்களும் சங்க நிர்வாகிகள்தான். அந்த லெட்டர் பேடில் எங்கள் பெயரும் உள்ளது. அந்த வகையில் லெட்டர் பேடை பயன்படுத்த எல்லா உரிமையும் எங்களுக்கு உள்ளது. இருந்தாலும், அவர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் நாங்கள் அந்தக் கடிதத்தை தயாரித்து நீதிமன்றத்துக்குக் கொடுத்தோம். ஆனால் எங்களை தவறாக சித்தரித்து அமீர் பேசி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.

உதவி இயக்குநர்கள் முற்றுகை

இன்று மாலை சென்னையில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகம் முன் குவிந்த ஏராளமான உதவி இயக்குநர்கள், சக உறுப்பினரான பொன்னுசாமிக்கு நீதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர். சங்கத்தின் நிர்வாகிகள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இயக்குநர் சங்கம் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டுள்ள இந்த சூழலில், சங்கத்தின் தலைவராக உள்ள பாரதிராஜா, எதுவும் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.



4.Thandavam movie unmasked!! Fired up assistant directors!

Assistant director, who had worked under Radhamohan (of Mozhi, Abhiyum Naanum and Payanam fame), has claimed that the script of Thandavam was his. He has said that he once approached Dhananjayan, CEO of UTV Motion Pictures (producers of Thandavam), and requested him to give him an ‘offer’ as director. He claims that he gave a ‘model script’ to Dhananjayan which has now been made asThandavam.
The assistant director came to know of the plagiaristic act only recently and approached the UTV management directly and threatened to go to Court to seek legal recourse. However, he has been ‘restrained’ for now, reports say, and add that talks are on with him to keep the matter under wraps as the film is to hit the screens very soon.

People who read this post also read :



No comments:

Post a Comment